“பள்ளிகள் அனைத்தும் மூடல்” – ஆன்லைன் வழி வகுப்புகளே இனி தொடரும்!கல்வி அமைச்சகம் புதிய உத்தரவு!!

0
"பள்ளிகள் அனைத்தும் மூடல்" - ஆன்லைன் வழி வகுப்புகளே இனி தொடரும்!கல்வி அமைச்சகம் புதிய உத்தரவு!!

இலங்கையில் ஏற்பட்ட தொடர் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பள்ளிகள் அனைத்தையும் தொடர்ந்து 2 வாரங்களுக்கு மூடுமாறு, கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 கல்வி அமைச்சகம் உத்தரவு :

இலங்கையில், கடந்த சில தினங்களாக கடும் பொருளாதார கட்டுப்பாடு எழுந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்ததால், சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது போக, நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இங்கு கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் 15 மணி நேரம் மின்வெட்டு என்ற பிரச்சனை இலங்கையில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

இந்த எரிபொருள்கள் பற்றாக்குறை காரணமாக, வருகிற திங்கட்கிழமை முதல் அடுத்த 2 வாரங்களுக்கு அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது போக, மின்சாரப் பிரச்சனை கொஞ்சம் சரியானதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக பாடம் நடத்துவதை  உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அந்நாட்டு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here