நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது அதிரடியாக குறைப்பு – கட்டாய முறையில் வீட்டுக்கு அனுப்ப முடிவு!!

0
நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது அதிரடியாக குறைப்பு - கட்டாய முறையில் வீட்டுக்கு அனுப்ப முடிவு!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைப்பதற்கான பட்ஜெட்டை, இலங்கையின் அதிபரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஓய்வு வயது குறைப்பு:

நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார கட்டுப்பாடுகள்  நிலவி வருகிறது. இந்த கடும் நிதி சுமையை சரிப்படுத்த, நாட்டில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே  பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இவர் சமீபத்தில் நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 65 வயதை 60 வயதாக குறைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 60 வயதுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள், டிசம்பர் 31ம் தேதிக்கு பின் கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவித்தார். இதற்கு, ஒரு சில மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

ஆனால் சிலர், இந்த நிபந்தனையை ஆட்சியாளர்களுக்கும் கொண்டு வர வேண்டும் எனவும், அரசியலில் தான் வயதானவர்கள் அதிகம் ஆள்கிறார்கள் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அரசின் இந்த முக்கிய அறிவிப்பு பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here