கோபி இயக்கத்தில் மீண்டும் மெட்டிஒலி 2 – அதுவும் சிவகார்த்திகேயன் பட நடிகையுடனா?? அப்போ சூப்பர் டூப்பர் தான்!!

0

90ஸ் கிட்ஸ் விருப்பமான சீரியலாக இருந்த மெட்டிஒலி 2வது பாகம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் அதில் வெள்ளித்திரையை சேர்ந்த பிரபல நடிகை நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டிஒலி

சீரியல் என்றாலே ஆரம்பத்தில் சன் டிவியாக தான் இருந்தது. எண்ணற்ற சீரியல்கள் தற்போது வரை நிலைத்துள்ளது என்று சொல்லலாம். மேலும் மக்கள் மத்தியிலும் சக்கை போடு போட்டது. சித்தி, கோலங்கள், மெட்டிஒலி போன்ற சீரியல்கள் மெகா ஹிட். 1000 எபிசோடுகள் வரைக்குமே விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அப்படி வெற்றிநடை போட்ட சீரியல் தான் மெட்டிஒலி.

குடும்ப பெண்களின் வாழ்க்கையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட சீரியல் தான் இது. அந்த சீரியலில் கோபி இயக்கினார். மெட்டிஒலி சீரியலிலும் அவருக்கு நல்ல கதாபாத்திரம். கோபி போல தான் மாப்பிள்ளை வேண்டும் என்று அந்த காலத்து இளசுகள் சுற்றி திரிந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது மெட்டிஒலி சீரியலின் 2 ஆம் பாகம் வரப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் வெள்ளித்திரை நடிகையான ஸ்ரீ திவ்யா இதில் நடிக்க போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. வாய்ப்புகள் கிடைக்காததால் ஸ்ரீ திவ்யா சின்னத்திரையில் களமிறங்கி விட்டார் என்றும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here