சளியை துரத்தி அடிக்கும் காரசாரமான “நாட்டுக் கோழி ரசம்”.,, இதோ செய்முறை!!

0
சளியை துரத்தி அடிக்கும் காரசாரமான
சளியை துரத்தி அடிக்கும் காரசாரமான "நாட்டுக் கோழி ரசம்".,, இதோ செய்முறை!!

சளி பிடித்தால், அம்மா நமக்கு வைத்துக் கொடுக்கும் முதல் உணவு ரசம் சாதம் தான். ஏனென்றால் ரசம் மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி உள்ளிட்ட மருத்துவ குணங்கள் உள்ளடங்கிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் புதுவிதமாக “நாட்டுக் கோழி மிளகு ரசம்” எப்படி தாயார் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
 • நாட்டு கோழி- 1/2 கிலோ
 • நல்லெண்ணெய் – தேவையான அளவு
 • கறிவேப்பிலை – தேவையான அளவு
 • பட்டை, லவங்கம் – 2
 • அண்ணாச்சி பூ, கிராம்பு – 2
 • தக்காளி – 2
 • சோம்பு – 1 டீஸ்பூன்
 • சீரகம் – 1 ஸ்பூன்
 • மிளகு – 2 ஸ்பூன்
 • இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
 • சின்ன வெங்காயம் – 15
 • பச்சை மிளகாய் – 1
 • மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
 • மல்லி தூள் – 1 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
 • கொத்தமல்லி – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை:

முதலில் சுவையான நாட்டுக்கோழி ரசம் செய்ய, மிளகு மசாலா தயாரித்து கொள்ள வேண்டும். அதற்கு சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, அண்ணாச்சி பூ, கிராம்பு சேர்த்து தாளித்த பின் கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்க வேண்டும். இதை தொடர்ந்து தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இப்போது இடித்து வைத்துள்ள மிளகு மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். இந்த சமயத்தில் எண்ணெய் பிரிந்து வரும், இப்போது நாட்டு கோழி கறியை சேர்த்து மசாலா ஓட்டும் வரை கிளற வேண்டும். இதையடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7-8 விசில் விட வேண்டும். விசில் இறங்கியதும் கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவையான நாட்டுக்கோழி ரசம் ரெடி. இதை சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here