காரசாரமான “சில்லி சிக்கன் கிரேவி”.,, வீக் எண்ட் ரெசிபி செஞ்சு அசத்துங்க!!

0
காரசாரமான
காரசாரமான "சில்லி சிக்கன் கிரேவி".,, வீக் எண்ட் ரெசிபி செஞ்சு அசத்துங்க!!

வீக் எண்ட் வந்துவிட்டாலே விதவிதமான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவதில் கிடைக்கிற சுகமே தனிதான். இந்த வார வீக் எண்ட்ல “சில்லி சிக்கன் கிரேவி” செஞ்சு அசத்துங்க. மேலும் இந்த கிரேவியை சாதம் மட்டுமல்ல இட்லி, தோசை, சப்பாத்திக்கு வச்சு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1/2 கிலோ
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி -1(பொடியாக நறுக்கியது)
  • எண்ணெய் – தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிது
  • சோம்பு -1 டீஸ்பூன்
  • வினிகர் – 1 ஸ்பூன்
  • சோயா சாஸ் – 2 ஸ்பூன்
  • தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்
  • சோள மாவு – 2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
  • குடைமிளகாய் – அரை கப் (நறுக்கியது)
  • கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை :

முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், வினிகர்,உப்பு, சோயா சாஸ் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதையடுத்து அதனுடன் சோள மாவு சேர்த்து பிரட்டி வைத்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பின் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

இப்போது தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து கிளறி விடவும், அடுத்து பொரித்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதையடுத்து கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான “சில்லி சிக்கன் கிரேவி” ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here