கிர்கிஸ்தானில் சிக்கியுள்ள 1,500 இந்திய மாணவர்களை தாயகம் திரும்ப உதவிய சோனு சூட்..!

0

கிர்கிஸ்தானில் சிக்கியுள்ள 1,500 இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வருவதற்காக நடிகர் சோனு சூட், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் சோனு சூட்..!

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையை இழந்து பசியால் வாடிய தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப தனது சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட். உதவி கோரி பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு கோரிக்கை வைத்தனர். அவரது சேவையை அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கால் கிர்கிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் 1,500 பேருக்கு உதவி செய்ய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார் சோனு சூட். தனி விமானம் மூலம் மாணவர்களை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளதாக அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதே போல் கிர்கிஸ்தானில் சிக்கியிருக்கும் மாணவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவருக்கு தொடர்பு கொள்ளுமாறு கூறியிருந்தார். இதனையடுத்து மாணவர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக விமானம் இன்று டெல்லியில் இருந்து கிளம்பியுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏழைகளுக்கு உணவளிக்க வருமானத்தின் ஒரு பகுதியை செலவிடும் தேநீர் விற்பனையாளர்..!!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ட்வீட்..!

இதுகுறித்த ட்விட்டர் பதிவில், இது ஒரு வரலாற்று நாள். ரியல் ஹீரோ சோனு சூட்டுடன் இணைந்து கிர்கிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 1,500 இந்திய மாணவர்களை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் ஸ்பைஸ்ஜெட் ஈடுபட்டுள்ளது. மொத்தம் 9 விமானங்கள் இயக்கப்படவிருக்கின்றன. அதில் முதல் விமானம் டெல்லியில் இருந்து இன்று கிளம்பியது’ என்று குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை தொடர்ந்து மற்ற நாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை தாயகம் அழைத்து வர முயற்சி எடுக்கும் நடிகர் சோனு சூட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here