பண்டிகை கால சிறப்பு ரயில்கள் ஜனவரி இறுதி வரை நீடிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

0

இப்பொழுது தொடர்ந்து வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு இயக்கப்பட்டு வந்த 22 சிறப்பு ரயில்களின் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த சேவை ஜனவரி இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை

பொதுவாக தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புதுவருடம், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல தற்போது டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடக்கும் கிறிஸ்துமஸ், புதுவருடம், மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொண்டாடுவதற்கு வசதியாக நாட்டின் பல பகுதிகளுக்கும் 22 சிறப்பு ரயில் போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் மிகவும் பயனடைந்துள்ளனர்.

மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தில் விலை – அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

railways india
railways india

தற்போது அந்த சேவையானது ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று ரயில்வே துறை நிர்வாகம் கூறியுள்ளது. கொச்சுவேலி -மைசூர், மங்களூரு-மும்பை லோகமான்ய திலக் ஆகிய தினசரி ரயில்களும் நாகர்கோவில்-மும்பை, எர்ணாகுளம் -ஓகா ஆகிய ரயில்களும் ஜனவரி இறுதி வரை சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மதுரை-பிகானீர், கொச்சுவேலி-இந்தூர், சென்னை எழும்பூர்-ஜோத்பூர், திருநெல்வேலி -பிலாஸ்பூர், ராமேஸ்வரம்-ஓஹா, திருநெல்வேலி -மும்பை தாதர், காந்திதாம்-திருநெல்வேலி ஆகிய வாராந்திர ரயில்கள் உள்ளிட்ட 22 ரயில்கள் அடுத்த மாதம் 31 வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here