தமிழகத்தில் முதன் முதலாக மாணவர்களின் கற்றல் குறைபாடுக்கு புதிய திட்டம்.., அரசு அறிவிப்பு!!

0
தமிழகத்தில் முதன் முதலாக மாணவர்களின் கற்றல் குறைபாடுக்கு புதிய திட்டம்.., அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் முதன் முதலாக மாணவர்களின் கற்றல் குறைபாடுக்கு புதிய திட்டம்.., அரசு அறிவிப்பு!!

அரசு மற்றும் அரசு சார்ந்த தொடக்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசானது தொடர்ந்து பல திட்டங்களை அமல் படுத்தி கொண்டே இருக்கிறது. அதே போல் மாணவர்களின் செயல்திறனை ஊக்குவிக்கும் விதமாக புது புது திட்டங்களை பள்ளி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் தஞ்சாவூர் கூட்டுறவு காலனியில் அமைந்திருக்கும் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு புதிதாக ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அதாவது மைக்ரோசாப்ட் மற்றும் பிளிங்க் அறக்கட்டளை சார்பில் தமிழகத்திலேயே முதன்முறையாக கற்றல் குறைபாடுகள் சிறப்புப் பயிற்சி மற்றும் ஆங்கில மொழி மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களே உஷார்..,  வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனியார் நிறுவன திட்ட மேலாளர் எல்.மகாலட்சுமி கூறியதாவது, இந்த திட்டம் மகாராஷ்டிரா , கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இப்பொழுது முதன் முதலாக தமிழகத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுப்பட்டினம், நீலகிரி, பள்ளி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளிலுள்ள தொடக்கப் பள்ளிகளிலும் விரைவில் இந்தத் திட்டத்தை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here