உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து வடக்கு மாநிலங்களில் உள்ள புனிதத் தலங்களுக்கு சிறப்பு ரயில் சேவையை இயக்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் சிறப்பு யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசியில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு யாத்திரை ரயில் சிவகாசி, மதுரை, திருச்சி, கும்பகோணம், சென்னை வழியாக காசி, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம், கயா ஆகிய இடங்களுக்குச் சென்று பிறகு ராமேஸ்வரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.