பொதுமக்கள் கவனத்திற்கு.., தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் தொடங்கியுள்ள ‘சிறப்பு காய்ச்சல் முகாம்’!!

0
பொதுமக்கள் கவனத்திற்கு.., தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் தொடங்கியுள்ள 'சிறப்பு காய்ச்சல் முகாம்'!!

தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. எனவே காய்ச்சல் அல்லது அறிகுறிகள் இருந்தால் மக்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதித்து கொள்ளலாம்.

சிறப்பு காய்ச்சல் முகாம்:

தமிழகத்தில் தற்போது ஹெச்1 என்1 இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதாவது அனைத்து மாவட்டங்களிலும், இந்த காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன் அடிப்படையில் மாநிலத்தில் ஹெச்1 என்1 இன்புளூயன்சா காய்ச்சலால், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை 1,166 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடவேண்டியவை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் பேரில் இந்த முகாம் இன்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் நடத்தப்படுகிறது. இந்த வகையில் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோலப்பஞ்சேரி பகுதியில் காய்ச்சல் மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு – அதிரகாரபூர்வ தகவல் வெளியீடு!!

இதையடுத்து காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் பாதிப்பு இருப்பவர்கள் முகாமில் வந்து சிகிச்சைப் பெறலாம் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமும் பரிசோதனைகள் நடைபெறுகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here