
தமிழகத்தில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில், மாநில அளவில் திண்டுக்கலை சேர்ந்த மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வில், 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த பொது தேர்வில், பங்கு பெறாத மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வை கல்வித்துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதன்படி, இந்த துணை தேர்வானது, ஜூன் 19 முதல் 26ம் தேதி வரை காலை 10 மணி முதல் 1.15 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வினை பயன்படுத்திக் கொண்டு, பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வர இயலாத மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து, அடுத்தக்கட்ட மேற்படிப்புக்கு செல்வர்.
இந்த தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி அடைவதற்காக, கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதாவது, வரும் 15ம் தேதி முதல் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பொது தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கும் இந்த சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.