ரேஷன் கார்டுகளில் இந்த விஷயத்தை மாற்றணுமா?? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவுப்பு!!

0

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாதாமாதம் நடைபெறும் நிலையில் இம்மாதத்திற்கூறிய முகாம் ஜூலை 9ஆம் தேதி நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் அட்டைகாரர்களுக்கு சிறப்பு முகாம்:

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் தரும் பொருட்கள் கிடைப்பதற்கு ரேஷன் கார்டு அட்டை ஒரு அங்கமாக உள்ளது. இதனை தொடர்ந்து ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் முகாம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூலை குரிய முகாம் நடத்தும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (9.07.2020) காலை (10.00 am – 1.00 pm ) வரை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இம்முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் போன்ற பல சேவைகளை இம்முகாமில் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து வயதான மூத்த குடிமக்களுக்காக அங்கீகார சான்றிதழ் தமிழக சார்பாக வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் மற்றும் ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழல் ஆகியவற்றை முகாமில் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here