தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் ஜூன் 1 முதல் திறக்க இருந்த நிலையில், கொளுத்தி வரும் கோடை வெயில் காரணமாக ஜூன் 7ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இன்னும் 4 நாட்களே உள்ளதால் பள்ளி வளாகம், வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக வெளியூர் சென்றிருந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப ஏதுவாகவும், வார இறுதி நாள் என்பதாலும் நேற்று (ஜூன் 2) முதல் நாளை (ஜூன் 4) வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழக இயக்குனர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சந்தனக்கட்டை மேனி நச்சுன்னு இருக்கு., அதை வளைத்து நெளித்து காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் கிரண்!!

அந்த வகையில் மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதியில் இருந்து 1,300 பேருந்துகளும், சென்னையில் இருந்து 900 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன. போக்குவரத்து துறையின் இந்த நடவடிக்கையால் கூட்ட நெரிசலில் சிக்காமல் சொகுசாக பயணம் செய்வதால் பயணிகள் பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here