72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம் – ‘தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’

0

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் இன்று தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னராக திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

எஸ்பிபி நல்லடக்கம்:

இந்திய திரையுலகின் ஒப்பற்ற கலைஞர் எஸ்பி பாலசுப்ரமணியம். இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இழப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்காக இதய அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது தாமரைப்பாகத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

எஸ்.பி.பி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்காத அஜித் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இறுதியாக அஞ்சலி செலுத்த திரையுலகினர், ரசிகர்கள் திரண்டு வந்தனர். பின்னர் புரோகிதர்கள் சடங்குகள் முடிந்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அவர்களின் தலைமையில் 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி சுட்டு 72 குண்டுகள் முழங்க எஸ்பிபி அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மண்ணுலகை தனது குரலால் கட்டிப்போட்ட கலைஞன், விண்ணுலகை அலங்கரிக்க சென்று உள்ளார் என கண்ணீர் மல்க ரசிகர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here