முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் வென்ற ஸ்பெயின் வீரர்.., இளம் வயதில் சர்வதேச சாதனை படைத்து அசத்தல்!!

0
முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் வென்ற ஸ்பெயின் வீரர்.., இளம் வயதில் சர்வதேச சாதனை படைத்து அசத்தல்!!

நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று, 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் அசத்தியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வே நாட்டின் காஸ்பர் ரூடுக்கு எதிராக விளையாடினார். இதில் சிறப்பாக விளையாடிய ஸ்பெயின் வீரர் 6-4, 2-6, 7-6 (1), 6-3 என்ற செட் கணக்கில் நார்வே வீரரை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் ஆடவர் டென்னிஸ் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த 1973 முதல் இதுவரையிலான ATP தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மிக இளம் வயது வீரர் என்ற அந்தஸ்தை  ஸ்பெயின் வீரர் கார்லோஸ் படைத்து அசத்தியுள்ளார். இந்த ஆட்டத்தை தொடர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கே. சினியகோவா – பி. கிரெஜிகோவா ஜோடி, அமெரிக்காவின் சி. மெக்னலி – டி. டவுன்சென்ட் ஜோடியை எதிர்கொண்டார்.

இந்த இரு ஜோடிக்கும் இடையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்க ஜோடி தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், அதன் பிறகு ஆஸ்திரேலிய ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அடுத்தடுத்து செட் பறிபோனது. இதனால் இறுதியில் 3-6, 7 -5, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஜோடி பட்டத்தை தட்டிச் சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here