சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஐஸ்க்ரீம் ,எறும்புகள், பழங்களை கொண்டு சென்ற ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்கலம்!!!

0

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்க்கு ஐஸ்க்ரீம் ,எறும்புகள், எலுமிச்சை மற்றும் சில செடிகள் போன்றவை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்கலத்தின் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.

‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்கலம்:

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நிறுவியுள்ளன. இதில் அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரபலமான தொழிலதிபர் எலான் மஸ்க்கின், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் இதுவரை 22 ராக்கெட்களை அனுப்பி வைத்துள்ளது. நேற்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் போன்றவை ஒன்றிணைந்து 2,170 கிலோ எடையுள்ள சரக்குகளை அதன் 23வது ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்பியது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஐஸ்க்ரீம் ,எறும்புகள், பழங்களை கொண்டு சென்ற ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்கலம்!!!
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஐஸ்க்ரீம் ,எறும்புகள், பழங்களை கொண்டு சென்ற ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்கலம்!!!

அதுமட்டுமில்லாமல் இந்த ராக்கெட்டில் இந்த ஆய்வு பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுகள் ஆகியவை சரக்கு விண்கலங்கள் மூலம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியுள்ள 7 விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் ( ஐஸ்கிரீம் உள்பட) உள்ளிட்டவை சரக்கு விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் எறும்பு, எலுமிச்சை பழம், அவகோடா பழம், சில செடிகளும் அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் செடிக்களுக்கான விதைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லமல் ஜப்பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மனித உயரம் உடைய ரோபோவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்ä

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here