அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் விண்வெளி சுற்றுப்பயணம்!!!

0

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவைப்படும் விண்கலங்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு முதன் முதலாக சுற்றுலா செல்ல உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான விண்கலங்களை  தயாரிக்கும்  ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனத்தை ஜெப் பெசோஸ் நடத்தி வருகிறார். மனிதர்களை  விண்வெளிக்கு அழைத்து செல்ல ‘நியூ ஷெப்பர்ட்’ என்ற விண்கலத்தை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. அதில் பயணம் மேற்கொள்ள மனிதர்கள் அந்நிறுவனம் ஏலம் மூலம் செய்யப்படுகிறார்கள். ஜெப் பெசோஸ் ரூ .20 கோடி ஏலத்தில் முதன் முறையாக விண்வெளி செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளதாவது,” நியூ ஷெப்பர்ட் விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல இருப்பதாகவும் இந்த பயணம் ஜூலை 20-ம் தேதியன்று மேற்கொள்ள இருப்பதாகவும்” அந்த பதிவில் ஜெப் பெசோஸ் கூறியுள்ளார். மேலும் இந்த பயணத்திற்கான ஏலத்தில் 143 நாடுகளை சேர்ந்த 6000 பேர் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here