குழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ் – “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி!!

0

குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும் அதே சமயம் மிகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் உடலுக்கு வலுவும், டேஸ்டியாக இருக்கும் “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • மீல் மேக்கர் – 100 கிராம்
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • சோள மாவு – 1/4 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பூண்டு – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
  • நறுக்கிய இஞ்சி – 2 (நறுக்கியது)
  • வெங்காயம் – 1
  • கேப்சிகம் – 1
  • உப்பு – 1/4 டீஸ்பூன்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • வினிகர் – 1 டீஸ்பூன்
  • சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்
  • தக்காளி கெட்ச்சப் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • சோள மாவு – 2 டீஸ்பூன்
  • வெங்காயத்தாள் – தேவையான அளவு

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்து அதனை சுடு  தண்ணீரில் போடா வேண்டும். 5 நிமிடங்களுக்கு பிறகு மீல் மேக்கர் நன்றாக உப்பி விடும். அப்பொழுது அதனை எடுத்து தண்ணீர் இலலாமல் பிழிந்து எடுக்க வேண்டும். அதனை எடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், சோள மாவு மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்று எதிரொலி – மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!!

இதனை ஒரு 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின், ஒரு காடாயில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, வெங்காயம். கேப்ஸிகம், வினிகர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை நன்றாக வதங்கியதும் அதில் சில்லி சாஸ், தக்காளி சாஸ், கெட்சப், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு பாத்திரத்தில் சோள மாவு ஒரு டீஸ்பூன் சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். அதனை அந்த கலவையில் சேர்த்து கிண்டி விட வேண்டும். பின், கடைசியாக இதில் பொரித்து வைத்த மீல் மேக்கர் கலவையை போட்டு கிண்டி விட வேண்டும். நன்றாக ஒரு முறை கிண்டி விட்டு இறக்கி விட வேண்டும். அவ்ளோ தான்!!

டேஸ்டியான “மீல் மேக்கர் சில்லி” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here