நீண்ட காலத்திற்கு பின் ரஜினி வீட்டில் நடந்த குட் நியூஸ்.., ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
நீண்ட காலத்திற்கு பின் ரஜினி வீட்டில் நடந்த குட் நியூஸ்.., ரசிகர்கள் வாழ்த்து மழை!
நீண்ட காலத்திற்கு பின் ரஜினி வீட்டில் நடந்த குட் நியூஸ்.., ரசிகர்கள் வாழ்த்து மழை!

மக்கள் உள்ளம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் தற்போது நடந்துள்ள சுப காரியத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

குட் நியூஸ்:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, கடந்த 2010 ல் அஷ்வின் என்பவரை மணந்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலும் கடந்த 2019-ல் இவர்கள் இருவரும் தனிப்பட்ட காரணத்திற்காக விவாகரத்து பெற்றுக்கொண்டனர். மேலும் கோவையை சேர்ந்த தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் நடிகருமான விசாகன் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு 2 வது திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவில் எம்.பி.ஏ., முடித்த விசாகன், தமிழகத்தில் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Is Soundarya Rajinikanth pregnant? Find out! | JFW Just for women

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாகன் வீட்டில் சவுந்தர்யா ரஜினிகாந்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடப்பட்டது. மேலும் விசாகன்-சவுந்தர்யா தம்பதியரின் முதல் குழந்தை அடுத்த மாதத்தில் பிறக்கும் என்று மருத்துவர்கள் தேதி கொடுத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார்.

நேற்று, அவர் தனது கர்ப்பத்தின் சில புகைப்படங்களையும், புதிதாகப் பிறந்த குழந்தையின் கை விரலை பிடிப்பது போன்ற புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இருப்பினும் பிறந்த குழந்தையின் முகத்தை அவர் வெளியிடவில்லை. மேலும் பிறந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் வைத்துள்ளதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இறைவனின் அருளாலும், பெற்றோர்களின் ஆசிர்வாதத்தால் குழந்தை பிறந்தது உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here