ஜூன் முதல் செப்டம்பர் வரை குறைவான மழைக்கே வாய்ப்பு., வானிலை ஆய்வகம் தகவல்!!

0

பொதுவாக பிப்ரவரி முதல் மே மாதம் வரை அதிகபட்ச வெயிலுடன் கோடை பருவம் நடக்கும். இதை தொடர்ந்து வரும் ஜூன் முதல் செப்டம்பர் ஆகிய 4 மாதங்கள் மழைபொழி காணப்படும். இந்த பருவ காலத்தை முன்னோர்கள் சம்பா/ ஆடிப்பட்டம் என பல பெயர்களால் அழைப்பது வழக்கம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்தவகையில் இன்னும் 3 நாட்களில் ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது அதில் கூறியிருப்பதாவது, இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவிலேயே இருக்கும் என கூறியுள்ளது. மேலும் ஜூன் முதல் செப்டம்பரில் பெய்யும் இந்த பருவ மழை வழக்கம் போல சற்று தாமதமாகவே தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா அளவில் phonepe செய்த சாதனை…, வியக்கவைக்கும் தகவல் வெளியீடு!!

மேலும் இந்த வருட ஜூன் பருவமழை சராசரியாக பெய்வதை விட சற்று குறைவாக இருக்கும் என்றும், வெறும் 55 % மட்டுமே மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இப்படி குறைவான மழை பொழிவின் காரணத்தால் காரீப் பயிர் சாகுபடி பாதிக்க வாய்ப்புள்ளதாம். ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் இயல்பை விட அதிக மழை பொலிவுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here