தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை, கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் வேலை நிமித்தமாக வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். எனவே அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக ரயில்வே, போக்குவரத்து நிர்வாகம் பல்வேறு சிறப்பு பேருந்து ரயில்களை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது வரும் நவம்பர் 8, 15, 27 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு அடுத்த நாள் காலை 11.45 மணிக்கு சென்றடையும். அதேபோன்று மறு மார்க்கத்தில் நவம்பர் 9, 16, 23 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு கிளம்பி சென்னைக்கு அடுத்த நாள் அதிகாலை 3.45 மணிக்கு வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.