பொதுவாக இசை மற்றும் நடனத்தில் ஆர்வம் உள்ளவர்கள் சோசியல் மீடியாவில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் தென் கொரிய பாடகி மற்றும் பாடலாசிரியரான கிம் நஹீ ”ப்ளூ சிட்டி” என்ற பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் தனது யூடியூப் பக்கத்தில் எக்கசக்க பாடல்களை பாடி வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் 24 வயதான இவர் நவம்பர் 8 ஆம் தேதி திடீரென உயிரிழந்துள்ளார். மேலும் இவருடைய உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவரின் திடீர் மரணத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. மேலும் இவரின் மரண செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.