பெண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்?? தென் ஆப்பிரிக்கா அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!!!

0

தென் ஆப்பிரிக்கா அரசு பெண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதை சட்டப்பூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கு அந்நாடு முழுக்க அரசுக்கு எதிராக கண்டணங்கள் வலுத்துள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே ஆண்கள் பல மணம் புரியலாம் என்பது சட்டப்பூர்வமானதுதான்.  தற்போது பெண்களுக்கு அது போன்ற ஒரு சட்டத்தை இயற்ற அந்நாட்டு அரசு பிறப்பித்த முன்மொழிவு அங்கு பல எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. அதே சமயம் அரசுக்கு ஆதரவாகவும் பெண் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

தென் ஆப்ரிக்காவில் 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு திருமணச் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அது அனைவருக்குமானதாக இல்லை என்றும் போதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் இந்த சட்ட முன்மொழிவை அரசு முன்வைத்துள்ளது. இதற்கு முன்பு மே மாதம் திருமணச் சட்டங்களில் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக அரசு தெரிவித்தபோதும் இதே போன்ற எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது.

south afica parliament

ஏற்கனவே அங்கு பெரும்பாலான பெண்கள், தென் ஆப்பிரிக்காவில் திருமணச் சட்டம் பாலின பாகுபாடுடன் உள்ளது. எனவே அதில் சமத்துவத்தை கொண்டு வர சட்டத்தை சீரமைக்கும் முயற்சிகள் எடுக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடதக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here