புதிய பதவியில் களமிறங்கும் சவுரங் கங்குலி.., அப்போ BCCI தலைவர் இவர் தானா??

0
புதிய பதவியில் களமிறங்கும் சவுரங் கங்குலி.., அப்போ BCCI தலைவர் இவர் தானா??

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவர் பதவிக்கு, சவுரங் கங்குலி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்டர்நேஷனல் கிரிக்கெட்

ICC ன் தற்போதைய தலைவராக கிரேக் பார்க்லேவின் இருந்து வருகிறார். இவர் கடந்த 2020 நவம்பர் மாதம் ICC தலைவராக பொறுப்பேற்று தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். இதற்கு முன்னர் பார்க்லேவின் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரின் ICC தலைவர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் ICC தலைவர் பதவிக்கு யாரை நியமிக்க போகிறார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றால் ஐசிசி உறுப்பினர்களின் ஆதரவு இவருக்கு தேவை.

அதன்படி ஐசிசி உறுப்பினர்கள் 16 பேரில் சவுரவ் கங்குலிக்கு பெரும்பாலானோர் ஆதரவாக வாக்களிக்க உள்ளனர். இதனால் கங்குலி ICC தலைவர் பதவியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஒரு வேலை ICC தலைவராக சவுரங் கங்குலி தேர்வு செய்யப்பட்டால் BCCI தலைவராக ஜெய் ஷா பதவி வகிக்க அதிக சான்ஸ் உள்ளது. ஜெய் ஷா தற்போது BCCI ன் செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here