பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இந்த வகை வைரஸ் பாதிப்பு உறுதி – மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கை!!

0

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சவுரவ் கங்குலிக்கு, டெல்டா வைரஸ் பரவல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சி அறிக்கை :

முன்னாள் இந்திய அணி கேப்டனும், தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருப்பவர் சவுரவ் கங்குலி. சில நாட்களுக்கு முன்பு, அவருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர், குணமாகி அண்மையில் வீடு திரும்பினார்.

இதையடுத்து, அவருக்கு, மீண்டும் லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனாவின் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா மருத்துவமனை நிர்வாகம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. இவர் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கிரிக்கெட் உலகத்தினர், அவர் நோயிலிருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here