2 கோடி மோசடி புகாரில் விஷ்ணு விஷால் தந்தை –  தப்பிக்க வழியே இல்லை! நடிகர் சூரி ஆவேச பேட்டி!!

0
2 கோடி மோசடி புகாரில் விஷ்ணு விஷால் தந்தை -  தப்பிக்க வழியே இல்லை! நடிகர் சூரி ஆவேச பேட்டி!!

பண மோசடி புகாரில் சிக்கிய பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தந்தை, ரமேஷ்  குடாவ்லா குறித்து காமெடி நடிகர் சூரி ஆவேச பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

ஆவேச பேட்டி :

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அண்மையில் டான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2020ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் காவல்துறை இயக்குனருமான ரமேஷ் குடாவ்லா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது மோசடிப் புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து, சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிரிவில் இவர்களுக்கு எதிராக 407 அறக்கட்டளை மோசடி மற்றும் 420 பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்காக இவர்களிடம் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அண்மையில் பேட்டியளித்த நடிகர் சூரியிடம், பண மோசடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. குற்றத்தை நிரூபிக்க நீதிமன்றமும் காவல் துறையும் இருக்கிறது என்றும், அவ்வளவு எளிதில் யாரும் தப்பிக்க முடியாது என்று விஷ்ணு விஷாலின் தந்தை குறித்து பேசி இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here