நடிகர் சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படம்….,படப்பிடிப்பு நிறைவு….,

0
நடிகர் சூரியின் 'கொட்டுக்காளி' திரைப்படம்....,படப்பிடிப்பு நிறைவு....,
நடிகர் சூரியின் 'கொட்டுக்காளி' திரைப்படம்....,படப்பிடிப்பு நிறைவு....,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘விடுதலை’. இதுவரை, சூரியை நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் மட்டுமே பார்த்து வந்த ரசிகர்கள், ‘விடுதலை’ திரைப்படத்தில் சூரியின் பெர்பாமன்ஸில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள். அந்த வகையில், விடுதலை திரைப்படம் சூரியின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம்.

இப்போது, நடிகர் சூரி வினோத் ராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். ‘கொட்டுக்காளி’ என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் கமலுடன் இணையும் சிம்பு….,பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….,

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்கிறார். அந்த வகையில், கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வந்த ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here