இது என்ன புது ட்விஸ்டு – சூரி வீட்ல திருடுனது திருடன் இல்லயாம்.. நகை கடை ஓனராம்!!

0

மதுரையில் நடந்த நடிகர் சூரி விட்டு திருமணத்தில் 10 பவுன் தங்க நகைகளை திருடிய நகைக்கடை அதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக திகழ்பவர் நடிகர் சூரி. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், வெண்ணிலா கபடி குழு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஜீவா, ஜில்லா, அரண்மனை ஆகிய ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார். சமீபத்தில் கூட சூரியின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் இவரது சகோதரர் இல்லத் திருமணம் செப்டம்பர் 9 ஆம் தேதி சிந்தாமணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சூரிக்கு வேண்டப்பட்ட பல முக்கிய பிரமுகர்கள், திரையுலகத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இதில் 10 பவுன் நகை திருடப்பட்டு உள்ளது.

இது குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளைஞர் ஒருவர் சுற்றித் திரிவது ‘ட்ரோன்’ கேமரா பதிவுக் காட்சியில் தெரிய வந்தது. பின்னர் அவரை பிடித்து அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர். பின்னர் அந்த திருடன் நகைக்கடை அதிபரின் மகன் என்பது தெரியவந்துள்ளது. பிரபலங்களின் வீடுகளில் நகை திருடுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here