ஆஸ்கர் விருதிற்கான தகுதி பட்டியலில் இடம் பிடித்த சூரரைப்போற்று – படுகுஷியில் ரசிகர்கள்!!

0

நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சூரரைப்போற்று. தற்போது இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

சூரரைப்போற்று:

கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்போது இந்தியாவில் ஓடிடி தளம் அபார வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடி தளம் மூலம் வெளியிட்டனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கினார். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படம் மட்டுமல்லாமல் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் தேர்வானது. பின்பு இந்த படத்தை ஆஸ்கர் குழு, ஆஸ்கருக்கு தகுதி வாய்ந்த சிறந்த படங்களுக்கான பட்டியலில் இந்த படத்தையும் சேர்த்தனர். மொத்தம் இந்த பட்டியலில் 366 படங்கள் இடம்பெற்றுள்ளது.

கவர்ச்சி பொங்க ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஐஸ்வர்யா மேனன் – சொக்கிப் போன ரசிகர்கள்!!

அதில் இந்திய சார்பாக சூரரைப்போற்று திரைப்படம் மட்டுமே தகுதி பெற்றுள்ளது. தற்போது சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதிற்கு சூர்யாவிற்கு வாக்களிக்க வருகிற மார்ச் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதன் இறுதி அறிவிப்பு வருகிற மார்ச் மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது இந்த தகவலின் மூலம் சூர்யா ரசிகர்கள் படு குஷி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here