ரெய்னாவுக்கு உதவிக்கரம் நீட்டிய சோனு சூட் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0

சி.எஸ்.கே பேட்ஸ்மேன் ரெய்னா தனது அத்தைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்பட்ட நிலையில் அவருக்கு சோனு சூட் முன்வந்து தானாக உதவி செய்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து பதில் ட்விட் செய்துள்ளார் ரெய்னா. தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது.

உதவ துடிக்கும் சோனு சூட் :

கோரோனோ முதல் அலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை உடனுக்குடன் செய்து மக்களின் மத்தியில் ஹீரோவாக  வலம் வருபவர் தான் நடிகர் சோனு சூட். மக்களின் குறைகளை தீர்க்க அவசரகால உதவிகளை விரைந்து செயல்பட்டு வந்த நடிகர் சோனு சூட் தற்போதும் அதே துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சி.எஸ்.கே பேட்ஸ்மேன் ரெய்னா மீரட்டில் உள்ள தனது அத்தைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை என ட்வீட் செய்திருந்தார். இப்பேரிடர் காலத்தில் மக்களின் அவசர தேவையை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபடும் சோனுசூட் “விவரங்களை அனுப்புங்கள் இன்னும் 10 நிமிடத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வந்தடையும் என அவர் ரெய்னா ட்வீட்க்கு பதில் அளித்துள்ளார்.

பின் ரெயின் ரீடிவீட் செய்துள்ளார், ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி என மட்டும் கூறி விடமுடியாது எனவும் ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here