காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!!

0
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மருத்துவ மனையில் அனுமதி!!
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மருத்துவ மனையில் அனுமதி!!

2019 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தவுடன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. இதையடுத்து புதிய தலைவராக மல்லிகார்ஜுன ராயன் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட தொடர் சரிவு காரணமாக ராகுல் காந்தி இந்திய ஒற்றுமையை கோரி நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சோனியா காந்தி 2 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் இவரின் மகனான ராகுல் காந்தியின் யாத்திரையில் கூட பங்கேற்று ஆதரவு திரட்டினார். இந்நிலையில் 76 வயதான சோனியா காந்தி சில ஆண்டுகளுக்கு முன் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அடிக்கடி உடல் உபாதைகளால் சிரமப்பட்டு வருகிறார்.

இயக்குனராக களமிறங்கும் தனுஷ்.., ஹீரோ இந்த விவாகரத்து நடிகர் தான்.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

ஆனால் இப்போது இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த கட்சி தொண்டர்கள் வழக்கமான சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாரா?? இல்லை வேறு ஏதும் பிரச்சனையா?? என குழப்பத்தில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here