பீஸ்ட் திரைப்படத்தால் வாரிசுக்கு ஏற்பட்டுள்ள சங்கட்டமான நிலைமை.,, இதுதான் காரணமா!!

0
பீஸ்ட் திரைப்படத்தால் வாரிசுக்கு ஏற்பட்டுள்ள சங்கட்டமான நிலைமை.,, இதுதான் காரணமா!!

விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் விற்பனையில் ஏதோ சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாரிசு திரைப்படம்:

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம், ரசிகர்களின் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் விஜய்யின் “வாரிசு” படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

வாரிசு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தன. மேலும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் தமிழக வெளியீட்டுக்கான விநியோக வியாபாரம் இன்னும் உறுதியாகவில்லை. அதாவது இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜு 80 கோடி ரூபாய் விலை சொல்கிறார்.

தளபதி 67ல் விஜய்யுடன் மோதும் சர்ச்சை நடிகர்.,, இனிமேல் தான் தரமான சம்பவமே இருக்கு!!

தமிழகத்தில் மாஸ்டர் படம் 82 கோடி ரூபாய் ஷேர் செய்ததையடுத்து, தமிழக வெளியீட்டு உரிமை 80 கோடி என்று சொல்லப்படுகிறது. ஆனால் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் 60 கோடி அளவிலேயே ஷேர் தொகை வசூலித்தது. இதனால் வாரிசு படத்தை 80 கோடி கொடுத்து வாங்க Distributors பெரும் தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகிறது. மேலும் இப்படத்தின் Digital மற்றும் Satellite உரிமை நல்ல விலைக்கு sale ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here