கொரோனா பரவலில் மத்திய அரசு அலட்சியம்? சமூக ஆர்வலர்கள் புகார்!!

0

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில் மத்திய அரசு நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா பரவல்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பையும் உயிரிழப்பையும் உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனமும் இதை கவனத்தில் கொள்கின்றன.

தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி – சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!!

ஆனால் மத்திய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்தியாவிற்கு பல வெளிநாடுகளில் இருந்து உதவிகள் வந்துள்ளன. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கவும், தடுப்பூசிகள் ஒரே விலையில் நாடு முழுவதும் கிடைக்கவும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மே 1 ஆம் தேதி அன்று தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில் அதற்காக பதிவு செய்தவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. தேவையான இடங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கு கூட போக்குவரத்து கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் மாநில அரசுகளில் கட்டுப்பாட்டில் விட்டு விட்டு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதால் கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்பு இல்லை. எனவே மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here