கவிஞர் சினேகன் பெயரில் நடந்த மிகப்பெரிய மோசடி – சின்னத்திரை நடிகை மீது போலீசில் புகார்!!

0
கவிஞர் சினேகன் பெயரில் நடந்த மிகப்பெரிய மோசடி - சின்னத்திரை நடிகை மீது போலீசில் புகார்!!

கவிஞர் சினேகன் தான் ஆரம்பித்த, அரசின் அனுமதி பெற்ற Sneham Foundation அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 பரபரப்பு புகார்:

கவிஞர் சினேகன் அரசின் அனுமதி பெற்ற, Sneham Foundation என்ற பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை  2015 லிருந்து நடத்தி வருகிறார். தற்போது, இவர் அறக்கட்டளையின் பெயரை இணையதளத்தில் போலியாக பயன்படுத்தி, சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி  நிதி வசூலித்ததாக குற்றம் சுமத்தி உள்ளார். இந்த வரி வசூல் குறித்து, வருமான வரித்துறை தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும், அது குறித்து தான் விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து இணையதளத்தில் அந்த, முகவரியை வைத்து சோதித்துப் பார்த்தபோது அவையெல்லாம் போலி என்ற விவரம் தெரிய வந்ததாகவும், நான் முறையாக அனுப்பிய எச்சரிக்கை கடிதமும் விலாசம் போலி என்பதால் திரும்பி வந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

அவர் தனது அறக்கட்டளையை, சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பாஜகவை சேர்ந்து நிர்வாகி என்றும், இவர் மீது பல மோசடி புகார்கள்  நிலுவையில் இருப்பதும்  குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here