பிக் பாஸ் பிரபலத்திற்கு நடைபெற்ற திருமண வைபோகம்… வைரலாகும் மேரேஜ் கிளிக்ஸ்!!!

0

சினிமா துறையில் பிரபல பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் சமீபத்தில் தன்னுடைய திருமண அறிவிப்பை அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சினேகனுக்கும் சீரியல் நடிகை கன்னிகா ரவிக்கும் கமல் தலைமையில் திருமணம் நடைபெற்று உள்ளது. மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கில்  படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார் புகழ் பெற்றவர் சினேகன். மேலும் இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் முகத்தை மக்களுக்கு காட்டினார் . இதன் மூலம் அவருக்கும் கமலுக்கும் இடையே நல்லதொரு இணைப்பு ஏற்பட்டது. மேலும் இவர் கமல் அவர்களின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் ஒரு முக்கிய பொறுப்பு வகித்தார்.

இதையடுத்து இவர் பல ஆண்டுகளாக காதலித்து வந்த சீரியல் நடிகை கன்னிகா ரவியை உலக நாயகன் தலைமையில் திருமணம் செய்து கொள்ள போவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். மேலும் இந்த அறிவிப்பின் போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது.

ஒரே சொடக்கில் கெட்டப்பை  மாற்றிய பூஜா ஹெக்டே… அல்லல்படும் ரசிகர்கள்!!!

இதையடுத்து இவர்களின் திருமணத்தில் கமல் தாலி எடுத்து கொடுக்க இன்று அதாவது ஜூலை 29 ஆம் தேதி மிக சிறப்பாக நடந்து முடிந்து உள்ளது. தற்போது இவர்களின் திருமணத்தில் குடும்பத்தாரும், பாரதிராஜா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். மேலும் சினேகன் கன்னிகா ரவியின் இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here