சினேகாவ யாரும் இப்படி பார்த்திருக்க மாட்டாங்க… போட்டோவை பார்த்து அதிர்ந்த இணையதளம்!!!

0

90s காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக சினிமாவில் வலம் வந்தவர் நடிகை சினேகா. இவரது படங்கள் மற்றும் வெளியாகும்  புகைப்படங்கள் என அனைத்திலும் கவர்ச்சி என்பது மிகவும் குறைவு தான். இந்நிலையில் தற்போது அவர் நீச்சல் உடையில் இருக்கும் அவரின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த போட்டோக்களை பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

மலையாள திரைத்துறை மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை சினேகா. இவருக்கு தமிழ் மொழியில் முதல்  படமாக அமைந்தது மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே என்ற படம் தான். அதை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க  வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி பல படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஒரு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இவர் நடிப்பில் வெளியான ஆனந்தம், உன்னை நினைத்து, வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, நான் அவனில்லை, பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தை பெற்று தந்தது. மேலும் இவர் நடிகர் பிரசன்னா உடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு, பிறகு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்தார். இருப்பினும் அவருக்கு அந்த அளவிற்கு மவுசு கிடைக்கவில்லை.

இதையடுத்து தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து பிட்டாக மாறி உள்ளார். இந்நிலையில் இவருக்கு தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.  இந்நிலையில் அவர் நீச்சல் உடையில் கவர்ச்சியாக இருக்கும் அவரின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது. அவரை குடும்ப பாங்கு மற்றும் ஹோம்லி லுக்கில் பார்த்து வந்த அவரின் ரசிகர்களுக்கு  இந்த கவர்ச்சி புகைப்படம் பெரும் அதிர்ச்சியை அளித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here