சினேகா பிரசன்னாவோட குழந்தைகளா இது? – எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்க!!!

0

சினிமா உலகில் தல அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகாவுக்கு அடுத்தபடியாக கியூட் தம்பதிகளாக வலம் வருபவர்கள் பிரசன்னா மற்றும் சினேகா அவர்கள். இவர்களுக்கு விஹான் என்ற ஒரு ஆண் குழந்தையும், ஆத்யந்தா  என்ற பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது விஹான் அவர்களின் 6வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

சினேகா அவர்கள் மலையாள மொழி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். மேலும் இவருக்கு தமிழில் முதல் படம் மாதவனுக்கு ஜோடியாக அவர் நடித்த என்னவளே படம் தான். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தால் பல குடும்ப பாங்கான, அதிகம் கவர்ச்சி இல்லாத கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் 2009 ஆம் வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் முதன் முறையாக இவருடன் ஜோடி சேர்ந்த நடிகர் பிரசன்னாவுடன் காதலில் விழுந்தார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் 2012 ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற ஒரு ஆண் குழந்தையும், ஆத்யந்தா  என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

தற்போது சினேகா மற்றும் பிரசன்னா அவர்களின் மகன் விஹான்னின் 6வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அவர்களின் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்து விட்டார்களா? என்று ஆச்சரியத்தில் உறைந்து உள்ளனர். மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here