புதுமண தம்பதிகளுக்கு விஜய் டிவி செய்த சிறப்பு – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

பிரபல பாடலாசிரியரான சினேகனுக்கு தற்போது திருமணம் முடிவடைந்துள்ள நிலையில் அவர்களை சிறப்பிக்கும் விதமாக விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினேகன், கன்னிகா

தமிழ் திரையுலகின் பிரபல படலாசிரியாக கலக்கி வருபவர் தான் சினேகன். வைரமுத்துவின் உதவி எழுத்தாளராக பணிபுரிந்து 2000 இல் இருந்து பாடலாசிரியராக உருவெடுத்தார். இவர் இதுவரையிலும் 750 படங்களில் 2500 பாடல் வரை எழுதியுள்ளார். மேலும் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பட்டையை கிளப்பினார்.

புதுமண தம்பதிகளுக்கு விஜய் டிவி செய்த சிறப்பு - ரசிகர்கள் வாழ்த்து மழை!!
புதுமண தம்பதிகளுக்கு விஜய் டிவி செய்த சிறப்பு – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

ஆரம்பதில் இருந்தே சிநேகனுக்கு நல்ல மதிப்பு மரியாதை இருந்தது. பிக் பாஸ் வீட்டில் யாருக்கு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக ஓடி வருவது சினேகன் தான். இந்நிலையில் தான் இவருக்கு கடந்த மாதம் கன்னிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

புதுமண தம்பதிகளுக்கு விஜய் டிவி செய்த சிறப்பு - ரசிகர்கள் வாழ்த்து மழை!!
புதுமண தம்பதிகளுக்கு விஜய் டிவி செய்த சிறப்பு – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

இதனால் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் விஜய் டிவி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது சினேகன் கன்னிகாவின் ரிசப்ஷன் விஜய் டிவியில் கோலாகலமாக நடக்கவுள்ளது. அதுவும் சரஸ்வதி பூஜை நாளில் தான் இந்த நிகழ்ச்சி வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here