
அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கி ஆரோக்கியமாக செயல்பட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் இளம் வயது முதலே பல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் “புன்னகை திட்டம்” என்ற பல் பாதுகாப்பு திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவர்களால் இலவசமாக பல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழக ஆசிரியர்களுக்கு கெடுபிடி., பொது தேர்வு முடியும் வரை யாரும் Leave ஐ நெனச்ச பாக்காதீங்க!!
இதுபோன்ற நோய்களை முளையிலே கிள்ளி ஏறிய வேண்டும் என்பதற்காக இத்திட்டம் முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருவதால் நாளை (மார்ச் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காய்ச்சல் முகாம் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.