
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஐந்து பேருக்கு சின்னம்மை பாதிப்பு சுகாதாரத்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன்
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப நாமம் எங்கும் ஒலிக்க ஆரம்பித்துவிடும். கொரோனா தொற்று முழுவதும் நீங்கி எந்த தடையும் இல்லாமல் அய்யனை தரிசிக்க சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருக்க தொடங்கிவிட்டனர் ஐயப்ப பக்தர்கள். தற்போது சபரிமலையில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16 முதல் சன்னிதானம் திறந்ததை அடுத்து நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டமும் உயர்ந்துகொண்டே செல்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி கேரள அரசு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகின்றனர். ஆனால் சபரிமலையில் ஓயாத மழை பெய்து முடிந்து நல்ல வெயில் அடித்துக் கொண்டு இருப்பதால் சின்னம்மை நோய் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசார்களில் 5 பேருக்கு சின்னம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையின் ஸ்கேனர்களை பரிசோதிக்க உத்தரவு – ஆதார் அமைப்பு எச்சரிக்கை !
பக்தர்கள் நலன் கருதி நோய் பரவாமல் இருக்க போலீசார் மற்றும் ஏனைய பணியாளர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட போலீசாரையும் அவர்களுடன் தங்கியிருந்த 12 போலீசாருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்.