‘ரூ 6 கோடி செலவில் உருவாகும் படங்களே சிறிய பட்ஜெட் திரைப்படமாகும்’ – புதிய ஒப்பந்தம் வெளியீடு!

0
90ஸ் காலத்தில் உச்சத்தில் இருந்து தற்போது காணாமல் போன 5 தமிழ் நடிகர்கள் - எல்லாம் தலை விதி!

ரூ.6 கோடிக்கும் குறைவான செலவில் உருவாக்கப்படும் திரைப்படங்களே சிறிய பட்ஜெட் திரைப்படம் என ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திரைப்படம் குறித்து ஏதேனும் முறைகேடு நடைபெற்றாலும் இந்த நிறுவனங்கள் தான் அதற்கான முடிவை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய பட்ஜெட்

தமிழகத்தில் சினிமாவின் மீது பொதுமக்களுக்கு அதிகமான ஆர்வம் இருந்து வருவதால் நாளுக்கு நாள் வெளியாகும் சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது ரசிகர்களிடையே ஒரு முக்கியமான செய்தியை கொண்டு சேர்க்கும் பொருட்டும், ரசிகர்களை திருப்திபடுத்தும் பொருட்டும் பலவிதமான சினிமாக்கள் வெளியாகியபடியே இருந்து வருகிறது. இதில் குறைந்த பட்ஜெட் கொண்டும் பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுவரைக்கும் நான்கு கோடிக்கும் குறைவான செலவினை கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களே சிறிய பட்ஜெட் திரைப்படமாக கருதப்பட்டது. ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் 6 கோடி ரூபாய் செலவில் உருவாகும் திரைப்படங்களே சிறிய பட்ஜெட் படங்களாக கருதப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது, இந்த 6 கோடி செலவிலேயே நடிகர், நடிகைகள், இயக்குனர் என அனைவரின் சம்பளமும் அடங்கிவிடும். மேலும், இந்த சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் குறித்து ஏதேனும் முறைகேடு நடைபெற்றாலும் அதற்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி நிறுவனம் சேர்ந்து அதற்கான முடிவை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here