அவசர கால நிலைக்கு முற்றுப்புள்ளி… கெத்து காட்டிய ஸ்லோவேனியா அரசு!!!

0

கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் ஊரடங்கு மற்றும் அவசரகால நிலை என அந்த அந்த நாட்டிற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில் ஸ்லோவேனியா அரசு அறிவிக்கப்பட்டு இருந்த அவசர கால நிலை நேற்று உடன் முடிவடைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் அதை நீங்குவதாக ஸ்லோவேனியா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஸ்லோவேனியாவில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது எட்டு மாதங்களுக்கு பிறகு  நேற்று உடன் முடிவடைந்தது. மேலும்  அங்கு இருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அதாவது, வீட்டிக்குள்ளையும் பொது இடங்களிலும் முக கவசத்தை அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் 75 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். அவர்களும் கொரோனா பரிசோதிக்கப்பட்டு நெகடிவ் ஆனவர்கள் அல்லது அந்த தொற்றிலிருந்து மீண்டவர்களாக அல்லது கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை சுகாதார அமைச்சகத்தின் மாநில செயலாளர் பிராங்க் விண்டிசார் தெரிவித்து உள்ளார். ஸ்லோவேனியாவில் நேற்றைய நிலவரப்படி 112 புதிய தொற்றுகள் மற்றும் 19 இறப்புகள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here