சிவகார்த்திகேயனின் டான் படம்… மனம் திறக்கும் ஆர்.ஜே.விஜய் …!

0

சின்னத்திரையில் பிரபலமாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ள பிரபல நடிகர் தான் SK என்று நாம் அழைக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள். சிவகார்த்திகேயன் டான் படத்தில்  மற்றொரு சின்னத்திரை பிரபலம் ஆர்.ஜே.விஜய் நடித்து உள்ளார். மேலும் அந்த படத்தின் அனுபவங்களை பற்றி ஆர்.ஜே.விஜய் பகிர்ந்து  உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டான் படத்தை சிபி சக்கரவர்த்தி என்னும் அறிமுக இயக்குனர் இயக்கி  உள்ளார். மேலும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் சூரி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து  உள்ளனர். இவர்களுடன் பிரபல தொகுப்பாளராக உள்ள ஆர்.ஜே.விஜய் மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி இணைந்து உள்ளனர்.

ஆர்.ஜே.விஜய் அவர்கள் தனது  அனுபவத்தை கூறுகையில் ,நாங்கள்  வெளிநாட்டிற்குச் செல்லும் போது எனது ஒருபுறம், எஸ்.கே  அண்ணாவும், மறுபுறம், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனி அவர்களும் இருந்தனர். மேலும் நான் அந்த காட்சியில் ஒரு நடிகர் என்பதை மறந்துவிட்டு, அவர்கள் நடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். மேலும் இந்த படம்  ஒரு பெரிய கற்றல் அனுபவம். இந்த படமானது  ஒரு வேடிக்கையான படமாக இருக்கும். சிவகார்த்திகேயன் அண்ணாவின் ரசிகர்கள் நிச்சயமாக இந்த படத்தை ரசிப்பார்கள், அது அவர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்து உள்ளதாகவும், அனிருத் இசையில் இந்த படத்தை  சிவகார்த்திகேயன் மற்றும்  சுபாஸ்கரன் அல்லிராஜா சேர்ந்து தயாரிக்கிறார்கள். அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன்  மீண்டும் ஒன்றிணைதல் ஏழாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here