பூஜையுடன் துவங்கிய SK-21….,பயங்கரமான டீமா இருக்கும் போலயே…..,

0
பூஜையுடன் துவங்கிய SK-21....,பயங்கரமான டீமா இருக்கும் போலயே.....,
பூஜையுடன் துவங்கிய SK-21....,பயங்கரமான டீமா இருக்கும் போலயே.....,

நடிகர் சிவகார்த்திக்கேயன் ‘மாவீரன்’ படத்தையடுத்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்னேஷனல் தயாரிப்பின் கீழ் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அந்த வகையில், சிவகார்த்திக்கேயன் நடிக்கும் 21 ஆவது திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்குகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். மேலும், முதல் முறையாக இந்த திரைபடத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் கை கோர்க்கிறார் சிவகார்த்திக்கேயன். இப்போது, கமல்ஹாசன் தயாரிக்கும் SK 21 படத்திற்கான பூஜை விழா இன்று நடைபெற்றுள்ளது.

IPL 2023: இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான்….,

இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திக்கேயன், சாய்பல்லவி, ஜி.வி. பிரகாஷ், இயக்குனர் ராஜ்குமார் என பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில், இன்று துவங்கியுள்ள இந்த படத்திற்கான துணை நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.A

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here