தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி வில்லன் அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் எஸ் ஜே சூர்யா. இவர் வில்லனாக நடித்த மெர்சல், ஸ்பைடர் திரைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட திரைப்படங்கள். அதிலும் இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியது மட்டுமல்லாமல் அந்த படத்தில் இவர் பேசிய ஒவ்வொரு டயலாக்கும் இன்று வரை மக்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சொல்லப்போனால் இவரது வில்லன் கேரியருக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். இப்படத்தில் அருமையாக நடித்த எஸ் ஜே சூர்யாவை பாராட்டிய படம் ரிலீஸாகிய கொஞ்ச நாட்களிலேயே வரலட்சுமி சரத்குமார் இவரை பாராட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனால் அதை எஸ் ஜே சூர்யா அப்போது கவனிக்கவில்லை.
தமிழகத்தின் இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இந்நிலையில் படம் ரிலீசாகி 2 ஆண்டுகள் கடந்த பின் வரலட்சுமி சரத்குமார் ட்வீட்டுக்கு இப்போது எஸ் ஜே சூர்யா பதிலளித்துள்ளார். அதாவது “இத்தனை நாள் இதை எப்படி பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி” என பதில் ட்வீட் போட்டுள்ளார். இந்த ட்வீட் இப்போது இணையத்தில் வைரலாக, இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Just totally loved #Maanaadu so so happyyy for you @SilambarasanTR_ superrrr proud of you..@iam_SJSuryah what a performance sir..hatsss off to you @vp_offl you should be proud of what you made..I laughed so much..absolutely fantastic..@thisisysr what can I say..superb.. pic.twitter.com/ZNJE2TEzwg
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) November 29, 2021