ரூ.50000 கோடியில் நீர்மூழ்கிக் கப்பல்கள்..  முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிப்பு!!!

0

அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. தற்போது இதற்கான பணிகளை துவங்கியுள்ளது. மத்திய அரசு இதற்காக 50000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்ற வருடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்க் தலைமையில் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பி 75 ஐ (P-75I) என்ற திட்டத்தின் கீழ் 6 நீர்முழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரூ.50000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இவற்றை தயாரித்து வழங்குவதற்கான பட்டியலில் இந்திய நிறுவனங்களுடன் பன்னாட்டு நிறுவனங்களும் இடம் பெற்றன.

 

மத்திய அரசு கொள்முதல் செயல்பாட்டில் விலை நிர்ணயம் செய்துவிட்டு, தற்போது இந்த நீர்முழ்கி கப்பல்கள் வடிவமைப்பதற்கான டெண்டரை மத்திய அரசு இரு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளது. அவை MDL நிறுவனம் மற்றொன்று L&T ஆகும். மேலும் இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள நீர்மூழ்கி கப்பல்கள் தற்போதுள்ள நவீன சாதனங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குவது, மாதிரிகளை அமைப்பது உள்ளிட்டவற்றில் இந்தியா முன்னோடியாக மாறி விடும். எனவே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை, மிக முக்கிய நடவடிக்கையாக பார்ப்பதாகவும் பாதுகாப்பு துறை கூறியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here