சிவசங்கர் பாபாவு பள்ளி ஆசிரியைகள் தலைமறைவு – பள்ளி ஆசிரியர், ஊழியர் அனைவர்க்கும் சிபிசிஐடி சம்மன்!!!

0
சிவசங்கர் பாபாவு பள்ளி ஆசிரியைகள் தலைமறைவு - பள்ளி ஆசிரியர், ஊழியர் அனைவர்க்கும் சிபிசிஐடி சம்மன்!!!
சிவசங்கர் பாபாவு பள்ளி ஆசிரியைகள் தலைமறைவு - பள்ளி ஆசிரியர், ஊழியர் அனைவர்க்கும் சிபிசிஐடி சம்மன்!!!

சென்னை போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியர்கள் தப்பி ஓட்டம். தலைமறைவாக இருக்கும் ஆசிரியர்களை தேடும் சிபிசிஐடி. பள்ளியில் பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்மன் அனுப்பிய சிபிசிஐடி.

சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியர்கள் தலைமறைவு…

சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் தனியார் பள்ளி நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா, இவர் மீது சமீபத்தில் பாலியல் புகார் வந்தது, இவரது பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளிடம் இருந்து புகாரை வந்தது. அத அடிப்படையில் இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர், அந்நிலையில் இவர் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் 18 பேர் இவர் மீது மீண்டும் புகார் அளித்தனர். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருந்ததாக மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் பின் இவர் மீது 3 போக்ஸோ வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியர்கள் தலைமறைவு...
சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியர்கள் தலைமறைவு…

இந்நிலையில் சிறையில் விசாரணையில் இருக்கும் சிவசங்கர் பாபாவிற்கு எதிராக ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர் சிபிசிஐடி அதிகாரிகள். அதற்காக இவருடன் இருந்தவர்கள் மற்றும் பள்ளியில் இவருக்கு பாலியலுக்காக மாணவிகளை அழைத்து சென்று சிவசங்கர் பாபாவிற்கு உதவிய ஆசிரியர்கள் அணைவாரியும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணைக்காக பள்ளியில் உள்ள 5 ஆசிரியர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை காயத்ரி, பிரவீனா மற்றும் 3 மூடன்று ஆசிரியர்கள் சம்மனை பெறாமல் மறுத்துள்ளனர். பின் மீண்டும் சம்மனை அனுப்பியது சிபிசிஐடி. இதை பார்த்ததும் அந்த 5 ஆசிரியர்களும் வீட்டை பூட்டு விட்டு தப்பி சென்று தலைமறைவாக உள்ளனர். சம்மனை பெறாமலும் விசாரணைக்கு பயந்து வராத அந்த 5 ஆசிரியர்களின் வீடுகள் பூட்டி இருந்ததால், வீட்டின் சுவரில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த பள்ளியில் வேலை பார்த்து வந்த அனைத்து ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்போவதாக சிபிசிஐடி மற்றும் போலீஸ் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here