சிவகார்த்திகேயனுடன் இணையும் இசை பிரபலம்……,ஆட்டம் பாட்டம் கன்பார்ம்….,

0
சிவகார்த்திகேயனுடன் இணையும் இசை பிரபலம்......,ஆட்டம் பாட்டம் கன்பார்ம்....,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். பல்வேறு நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் அறிவியல் சார்ந்த கதைக்களத்துடன் தயாராகி இருக்கும் ‘அயலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ரஜினி திரைப்பட நடிகர் சரத் பாபு திடீர் மரணம்….,அடுத்தடுத்த அதிர்ச்சி – சோகத்தில் திரையுலகம்….,

ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார். நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதுவரை, அனிருத், ஹிப் ஹாப் தமிழா போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் நடித்த சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முதன் முதலாக ஜி.வி பிரகாஷ் உடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here