விபத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு நிதியுதவி – தேர்தல் ஆணையர் சாகு அறிவிப்பு!!

0

இன்று காலை யாரும் எதிர்பாராத வகையில் சிவகங்கையை அருகே தேர்தல் பணியின் பொது இரண்டு போலீசார் விபத்துக்குள்ளாகி தங்களது உயிரை இழந்துள்ளனர். தற்போது அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

சிவகங்கை:

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை தக்க பாதுகாப்புடன் நடத்துவதற்கு தேர்தல் அதிகாரிகள் மிக தீவிரமாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர். மேலும் இந்த தேர்தலில் எந்த அசம்பாவிதமும் நடத்திட கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் இன்று சிவகங்கை பகுதியில் போலீஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இவர்கள் காரில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த பேருந்து இவர்கள் காரின் மீது மோதியது. இதனால் இவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் ஒரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர் உடன் இருந்த மற்றொரு அதிகாரியும் தற்போது உயிரிழந்துள்ளார்.

#INDvsENG 2வது ஒருநாள் போட்டி – ரோஹித்,தவான் ஏமாற்றம்!இந்தியா 41-2!!

விபத்தில் எஸ்எஸ்ஐ கர்ணன் மற்றும் காவலர் பாலசுப்ரமணியன் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் வேதனைக்குள்ளாகியது. தற்போது இந்த 2 போலீசார் குடும்பத்திற்கு நிதியுதவியாக ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here