‘ஒரு விஷயத்தை வச்சு ஜட்ஜ் பண்ணாதீங்க’ – நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சிவாங்கி!!

0

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் கடந்த எபிசோடில் சிவாங்கி பேசிய ஓர் வார்த்தை சர்ச்சையை கிளம்பியது. தற்போது அதற்கு பதில் அளித்துள்ளார் சிவாங்கி.

குக் வித் கோமதி:

தனியார் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி அந்த தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங் ஸ்டார் என்றே சொல்லலாம். அந்த நிகழ்ச்சியை பார்த்தால் தங்கள் சோகம் மற்றும் பிரச்சனைகள் மறந்து வயிறார சிரிக்கிறோம் என்று மக்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி தான் எங்கள் ஸ்ட்ரெஸ் பர்ஸ்டர் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக மக்கள் தவமிருந்து காத்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நிகழ்ச்சியில் சமையலை விட ஷிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை போன்றவர்கள் செய்யும் கலாட்டா மக்கள் மத்தியில் அதிகமாக கவரப்படுகிறது. மேலும் ஷிவாங்கி அஷ்வினுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி மிக கியூட் ஆக இருக்கும். இவர்களுக்காக தான் இந்த நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் பார்த்து வருகின்றனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் கடந்த வார எபிசோடில் ஷிவாங்கி பேசிய ஓர் வார்த்தை சர்ச்சையை கிளப்பியது.

ஜீன்ஸ் உடையில் சிக்குன்னு காட்சியளிக்கும் சம்மு – சொக்கிப்போன ரசிகர்கள்!!

கடந்த எபிசோடில் வழக்கம் போல் மதுரை முத்து ஓர் மொக்க ஜோக் அடிக்க அதற்கு கவுண்டர் அளிக்கும் வகையில் ஷிவாங்கி ஓர் வார்த்தையை விடுவார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் சிலருக்கு ஷிவாங்கி மீது சில கசப்பான எண்ணம் ஏற்பட்டது. இந்நிலையில் ஷிவாங்கி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஒரு வார்த்தையை வைத்து ஒருவரின் கேரெக்டரை மதிப்பிடக்கூடாது. அதை வைத்து யாரையும் ஜட்ஜ் பண்ணாதீங்க என்று விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஷிவாங்கி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here